Oct 24, 2025
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

தோக்யோ அருகே பெரிய பள்ளம், டிரக் ஓட்டுனர் அதில் விழுந்ததால், வீடுகளைக் காலி செய்ய அருகில் உள்ளவர்களுக்கு கோரிக்கை

Share:

ஜப்பான், தோக்யோ அருகே திடீரென ஏற்பட்ட குழி விரிவடைந்து வரும் நிலையில், அப்பகுதிக்கு அருகே உள்ள ஐந்து வீடுகளில் உள்ளவர்கள் தத்தம் இருப்பிடங்களைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வேளையில் குழியினுள் சிக்கியிருந்த டிரக் ஓட்டுனரை மீட்கும் முயற்சிகள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

74 வயதான அந்த டிரக் ஓட்டுநர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அக்குழியினுள் விழுந்தார். அது 40 மீட்டர் வரை விரிவடைந்தத. அது கிட்டதட்ட ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் நீளமாகும்.


எனவே தத்தம் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நாடுமாறூ அருகில் உள்ள ஐந்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நேற்று, ஜப்பானிய மீட்புப்படையினர் கனரக உபகரணங்களை அனுப்பவும் டிரக் டிரைவரை அடையவும் 30 மீட்டர் சாய்வைக் கட்டி முடித்தனர். ஆனால் சரிவின் அடியில் கழிவுநீர் கண்டுபிடிக்கப்பட்டது. மழை நீரும் இருந்ததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

Related News