Oct 16, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: கால்பந்து மைதானத்தில் 4 பேர் பலி
உலகச் செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: கால்பந்து மைதானத்தில் 4 பேர் பலி

Share:

வாஷிங்டன், அக்டோபர்.11-

அமெரிக்காவின் மிசிசிபியில் கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் கால்பந்து மைதானம் ஒன்று உள்ளது. இங்கு திடீரென மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

காயமடைந்தவர்களில் நான்கு பேர் விமானம் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதுவரை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் யாரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர். அண்மைய காலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த மாதம் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, வாகன நிறுத்துமிடத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். கடந்த அக்டோபர் 9ம் தேதி ஹூஸ்டன் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: கால்பந்து மைதானத்தில் 4 ... | Thisaigal News