Nov 26, 2026
Thisaigal NewsYouTube

உலக அரசியல் தலைமைத்துவ மதிப்பீட்டில் அன்வார் 10-வது இடம்! மலேசியாவுக்கு அனைத்துலக அங்கீகாரம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உலக அரசியல் தலைமைத்துவ மதிப்பீட்டில் அன்வார் 10-வது இடம்! மலேசியாவுக்கு அனைத்துலக அங்கீகாரம்

அனைத்துலக அளவில் தமது நாட்டின் அரசதந்திர நலன்களை முன்னெடுக்கும் அரசியல் தலைமைத்துவத்தின் செயல்திறனை மதிப்பிடும் 2026ஆம் ஆண்டுக்கான ஆசியா பவர் இன்டெக்ஸ் பட்டியலில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உலகளவில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட லோவி இன்ஸ்டிதுட் வெளியிட்டுள்ள இந்த மதிப்பீட்டில், அன்வார் 100 புள்ளிகளுக்கு 46 புள்ளிகளைப் பெற்றுள்ளார். தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மூன்றாவது இடத்திலும், வியட்நாம் அதிபர் டூ லாம் எட்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

சீன அதிபர் ஸி ஜின்பிங் 100 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

அரசியல் தலைமைத்துவத்தின் செயல்திறன் குறித்த நிபுணர்களின் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆசிய பிராந்தியத்தில் 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அதிகாரம், செல்வாக்கு உள்ளிட்ட அம்சங்களையும் இந்த ஆசியா பவர் இன்டெக்ஸ் மதிப்பிட்டு வருகிறது.

இந்த மதிப்பீட்டில் மலேசியா உலகளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →