Oct 19, 2025
Thisaigal NewsYouTube
சீனாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது; 200 பேர் படுகாயம்
உலகச் செய்திகள்

சீனாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது; 200 பேர் படுகாயம்

Share:

பெய்ஜிங்: சீனாவை உலுக்கி எடுத்த அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

சீனாவின் வடமேற்கு கன்சு மாகாணத்தில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 அலகுகளாகப் பதிவானது. லிங்சியா செங்குவான் ஜென் என்ற இடத்தில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 111 பேர் பலியாகி உள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Related News