Oct 30, 2025
Thisaigal NewsYouTube
பாலித் தீவுக்கு விமானச் சேவை வழக்கத்திற்குத் திரும்பியது
உலகச் செய்திகள்

பாலித் தீவுக்கு விமானச் சேவை வழக்கத்திற்குத் திரும்பியது

Share:

ஜகார்த்தா, ஜூன்.19-

இந்தோனேசியா, பாலித் தீவுக்கு விமானச் சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளன. பாலி விமான நிலையமும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பிரதான தீவு சுற்றலாத் தளமான பாலியில் வீற்றிருக்கும் 1,703 மீட்டர் உயரமுள்ள லியுதோபி லகி லகி எரிமலை நேற்று குமுறத் தொடங்கியது.

இதனால் வான் போக்குவரத்துப் பாதையில் புகையும், சாம்பலும் சூழ்ந்த நிலையில் விமானங்கள் பறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனினும் இன்று வானம் தெளிவடைந்தைத் தொடர்ந்து அந்தத் தீவுக்கு விமானங்கள் பறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக பாலி அனைத்துலக விமான நிலையத்தின் தொடர்புத்துறை தலைவர் கெடெ எகா சண்டி அஸ்மாடி தெரிவித்தார்.

Related News