வாஷிங்டன்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி வந்த கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 4 மாதங்களாக இந்த போரானது நீடித்து வருகிறது. சண்டை நீடித்துக் கொண்டே இருப்பதால் இந்தப் போர் பிராந்திய போராக மாறுமோ என்று உலக நாடுகள் அஞ்சுகின்றன. இது ஒரு பக்கம் இருக்க ஹமாஸுக்கு ஆதரவாக இருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் வரும் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகின்றன.
இதனால் அங்கே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏமனை சேர்ந்த இந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலில் நடத்தும் இந்த தாக்குதலால் வணிக கப்பல் சேவையும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. செங்கடலில் இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்களை கண்டால் சரமாரியாக தாக்கி விடுகின்றன.
இதனால் செங்கடல் வழியிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் அதிகரித்து வருவதால் ஏமனில் பெரும்பாலான பகுதிகள் ஹவுதி வசமே உள்ளது. இந்த நிலையில், இன்று அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு சொந்தமான கப்பல்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.