Oct 30, 2025
Thisaigal NewsYouTube
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா? 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
உலகச் செய்திகள்

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா? 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு

Share:

வாஷிங்டன், ஜூன்.20-

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா, இல்லையா என்பது குறித்து இன்னும் 2 வாரங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்வார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஈரானுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம் . அதற்குக் குறைந்த வாய்ப்பே உள்ளது. இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா, இல்லையா என்பது குறித்து 2 வாரங்களில் அதிபர் டிரம்ப் முடிவு செய்வார் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கேரொலின் லியாவிட் தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும். வலிமையின் மூலம் அமைதியை உருவாக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் நம்புகிறார்.

எனவே ராஜதந்திரத்திற்கான வாய்ப்பு இருந்தால் அதிபர் எப்போதும் அதைப் பயன்படுத்திக் கொள்வார். ஆனால் அவர் பலத்தை பயன்படுத்தப் பயப்படவில்லை என்று கேரொலின் லியாவிட் தெரிவித்துள்ளார்..

தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரொக்கா மருத்துவமனையைக் குறி வைத்து, ஈரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். தெஹ்ரானில் உள்ளவர்கள் கடும் விளைவுகளைச் சந்திப்பார்கள் என்று அவர் நினைவுறுத்தியுள்ளார்.

Related News