மெல்போர்ன்: தினமும் அதிகாலை சரியாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இரு ஆஸ்திரேலியா நகரங்களுக்கு இடையே காலியாக ஒரு கோஸ்ட் விமானம் இயக்கப்படுகிறது. அதற்கான காரணம் என்ன தெரியுமா.. வாங்கப் பார்க்கலாம்.
சர்வதேச அளவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் மிட்டில் கிளாஸ் மக்கள் வருமானம், குறையும் விமான கட்டணம் என இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
அதிலும் குறிப்பாக Low cost ஏர்லைன் எனப்படும் குறைந்த விலையில் இயங்கும் விமானங்கள் வந்தவுடன் சர்வதேச விமானங்களில் பணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இப்போதெல்லாம் விமானங்களில் டவுன் பஸ்களை போல அதிகபட்ச பயணிகளையே ஏற்றிச் செல்கிறார்கள்.
பேய் விமானங்கள்: நிலைமை இப்படி இருக்க ஆஸ்திரேலியாவில் தினசரி காலை 5.55 மணிக்கு மெல்போர்ன் நகரில் இருந்து கத்தார் ஏர்வேஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று கிட்டதட்ட காலியாக அடிலெய்டு நகருக்குச் செல்கிறது. 354 சீட் கொண்ட இந்த விமானத்தில் எப்போதும் 4, 5 பேர் மட்டுமே இருப்பார்கள்.
பொதுவாக இப்படி ஆட்களே இல்லாமல் காலியாக இயக்கப்படும் விமானங்களைப் பேய் விமானங்கள் அதாவது ghost fligts என்று அழைப்பார்கள். ஆனால், கத்தார் ஏர்வேஸ் விமானம் எதற்காக காலியாக விமானங்களை இயக்குகிறது.. அதுவும் ஆஸ்திரேலியாவில் என்ற குழப்பம் வரலாம்.