Jan 16, 2026
Thisaigal NewsYouTube
பாகிஸ்தானில் வெப்ப அலை: 6 நாட்களில் 568 பேர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

பாகிஸ்தானில் வெப்ப அலை: 6 நாட்களில் 568 பேர் உயிரிழப்பு

Share:

பாகிஸ்தான், ஜுன் 28-

பாகிஸ்தானின் தென்பகுதியில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 6 நாட்களில் 568 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் கடந்த செவ்வாய்க்கிழமை மாத்திரம் 141 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எனினும், உயிரிழந்த ஒவ்வொருவரின் மரணத்திற்கும் சரியான காரணங்களை உறுதிப்படுத்த தற்போது முடியாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், கராச்சியில் வெப்பநிலை 40C (104F) க்கு மேல் உயர்ந்ததையடுத்து, அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கராச்சிவில் மருத்துவமனையில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைக்கு இடையே 267 பேர் வெப்பப் பக்கவாதத்தால் (heatstroke ) அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 12 பேர் இறந்துவிட்டதாகவும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு பொறுப்பான டாக்டர் இம்ரான் சர்வார் ஷேக் தெரிவித்துள்ளார்.

வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வௌிப்புற வேலைகளில் ஈடுபடுபவர்கள் என டாக்டர் இம்ரான் சர்வார் ஷேக் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News