ரியோ டி ஜெனிரோ, அக்டோபர்.29-
போதைப் பொருள் கடத்தல் கும்பலைக் கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் போலீசார் நடத்திய சோதனையின் போது நடந்த தாக்குதலில் 4 போலீசார் உட்பட 64 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்தது. இதனைத் தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் போலீசார் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனால் மோதல் முற்றியது. இந்தத் தாக்குதலின் போது 4 போலீசார் உட்பட 64 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள 46 பள்ளிகள் மூடப்பட்டதாகவும், பல்கலைக்கழகத்தில் சிறப்பு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
போதைப் பொருள் கடத்தல் கும்பல் மீதான ஒரு வருட விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.








