Oct 13, 2026
Thisaigal NewsYouTube

லண்டன் தீ விபத்தில் சதியில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லண்டன் தீ விபத்தில் சதியில்லை

லண்டன், மார்ச்.22-

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் அனைத்துலக அளவில் அதிக விமானங்கள் வந்து செல்லும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று. நாள் ஒன்றுக்கு, 2 லட்சம் பயணியர் இந்த விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், ஹீத்ரோ விமான நிலையத்திற்கான மின் வினியோகம், அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து வழங்கப்படுகிறது. இந்த துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. புறப்பட வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வருகை மற்றும் புறப்பாடுக்கு காத்திருந்த 1,350 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது தீ கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 18 மணி நேரத்திற்கு பிறகு விமானச் சேவை துவங்கியது.

இந்த தீ விபத்திற்கு சதி செயல் காரணம் இல்லை. விமான நிலையத்தில் சோதனை செய்தபோது சந்தேகப்படும் வகையில் எந்த பொருளும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →