Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஹிமாச்சலில் கொட்டியது கனமழை: 3 பேர் பலி!
உலகச் செய்திகள்

ஹிமாச்சலில் கொட்டியது கனமழை: 3 பேர் பலி!

Share:

சிம்லா, ஜூன்.30-

ஹிமாச்சல் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கனமழை காரணமாக, 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை பருவமழை காரணமாக 20 பேர் பலியாகி இருக்கின்றனர்.

இந்தியா முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. ஹிமாச்சல் மாநிலத்தில் பலத்த கனமழை கொட்டி வருகிறது. அதில் சிம்லாவில் உள்ள ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீடு இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாநிலம் முழுவதும் 129 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

சிவாலிக் நகரில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஹிமாச்சல், உத்தரகண்டிற்கு இன்று அதிகனமழைக்கான சிவப்பு னிர எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related News