Oct 9, 2026
Thisaigal NewsYouTube

தான்சானியாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 40 பேர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தான்சானியாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 40 பேர் பலி

டொடோமா, ஜூலை.01-

தான்சானியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில், 40 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவின் கிளிமஞ்சாரோ பகுதியில், 50 பேருடன் ஒரு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. திருமண விழாவில் பங்கேற்பதற்காக அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பஸ் டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, எதிரே வந்த மற்றொரு சொகுசு பேருந்து மோதியது. மிகவும் வேகத்துடன் மோதியதில், இரண்டு பஸ்களும் தீப்பிடித்து எரிந்தன.

இந்தக் கோர விபத்தில், இரண்டு பேருந்துகளில் பயணித்த, 40 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மோசமான தீக் காயங்கள் காரணமாக, உயிரிழந்தவர்களில் பலர் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →