Oct 21, 2025
Thisaigal NewsYouTube
 இங்கிலாந்து அணி நிதான ஆட்டம்
உலகச் செய்திகள்

 இங்கிலாந்து அணி நிதான ஆட்டம்

Share:

மான்செஸ்டர்: இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கைஅணி 74 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தனஞ்ஜெயா டி சில்வா 74, மிலன் ரத்னாயகே 72 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஷோயிப் பஷிர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் 22,லாரன்ஸ் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. இதனால் மதிய உணவு இடைவேளைக்கு பின்னரே ஆட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

பென் டக்கெட் 18, கேப்டன் ஆலி போப் 6, லாரன்ஸ் 30, ஜோ ரூட் 42, ஹாரி புரூக் 56 ரன்களில் ஆட்டமிழந்தனர். 45 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜேமி ஸ்மித்43, கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டோ 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

Related News