தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் 48 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நகரின் அனைத்து 50 மாவட்டங்களிலும் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை முதல் சுமார் 300 மில்லிமீட்டர் மழை பெய்ததால் கால்வாய்கள் நிரம்பி வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. குறைந்தது 13 முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சுமார் 980 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், படுத்த படுக்கையாக இருந்த 36 பேர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பேங்காக் ஆளுநர் சாட்சார்ட் சிட்டிபுண்ட் (Chadchart Sittipunt) கூறுகையில், மழை நின்றால் வெள்ளநீர் முழுமையாக வடிய இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும் என்றார்.








