அமீரகம்: ஐக்கிய அமீரகத்தில் நடந்த லாட்டரி நிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு ரூ. 44 கோடி மெகா ஜாக்பாட் கிடைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் இருந்து பலரும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக ஐக்கிய அமீரகத்திற்குச் செல்லும் இந்தியர்கள், அங்கே பல ஆண்டுகள் பணிபுரிகிறார்கள்.
ஜாக்பாட்: அப்படி ஐக்கிய அமீரகத்தில் உள்ள அல் ஐன் என்ற இடத்தில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு டிரைவர் ஒருவருக்கு மெகா ஜாக்பாட் கிடைத்துள்ளது. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நடந்த பிக் டிக்கெட் லைவ் டிராவில் அவருக்கு 20 மில்லியன் திர்ஹம் கிடைத்துள்ளது. இது இந்திய மசிப்பில் சுமார் ரூ. 44 கோடியாகும். சீரிஸ் 259 பிக் டிக்கெட் லைவ் டிராவில் வென்ற இந்த இந்தியரின் முனவர் ஃபேரூஸ்.
அங்கே டிரைவராக பணிபுரிந்து வந்த ஃபோரூஸுக்கு அதில் வந்த வருமானம் போதவில்லை. இதனால் வேறு எப்படியாவது கூடுதலாகச் சம்பாதிக்க வேண்டும் என அவர் யோசித்துள்ளார். இதற்காகவே அவர் லாட்டரியை வாங்கத் தொடங்கியுள்ளார். இதற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் ஃபைரூஸ் லாட்டரியை வாங்கியுள்ளார். இருப்பினும், இத்தனை காலத்தில் அவருக்குப் பெரிதாக எந்தவொரு பரிசும் கிடைத்தது இல்லை.