மணிலா, அக்டோபர்.10-
பிலிப்பைன்சின் மிண்டானாவ் நகரில் இன்று அதிகாலை 7.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 62 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக, பிலிப்பைன்ஸ் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை.