பேங்காக், ஆகஸ்ட்.09-
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் ஒரு பேரங்காடி முன்புறம் நேற்று முன்தினம் இரவு மலேசிய சுற்றுப் பயணிகள் இருவர், அடையாளம் தெரியாத நபரால் தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணை தேவை என்றும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் தாய்லாந்து அமலாக்கத் தரப்பினருடன் ஒத்துழைக்கத் தாங்கள் தயார் என்றும் மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை முடிவுறும் வரையில் இது குறித்து ஆருடம் கூற வேண்டாம் என்று பொதுமக்களை வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.