Jun 18, 2026
Thisaigal NewsYouTube
நிலவில் புதிய விண்கலத்தைக் களமிறக்கிய சீனா! பாறை, மண் மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவர திட்டம்!
உலகச் செய்திகள்

நிலவில் புதிய விண்கலத்தைக் களமிறக்கிய சீனா! பாறை, மண் மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவர திட்டம்!

Share:

சீனா, ஜூன் 04-

சீனாவின் தெற்கு தீவான ஹைனானில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து சீனாவின் லாங் மார்ச்-5 ராக்கெட் மூலம் சாங்-6 விண்கலம் ஒரு மாதத்திற்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங் நேரப்படி (2223 GMT) காலை 6:23 மணிக்கு, சீனாவின் விண்வெளி ஏஜென்சியின் கூற்றுப்படி, நிலவின் மேற்பரப்பில் இருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு எடுத்துவரும் திட்டத்துடன் புதிய விண்கலத்தை சீனா நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. உள்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6:23 மணிக்கு சாங்-6 (Chang'e-6) விண்கலம் நிலவை எட்டியது.

சாங்-6 விண்கலம் தரையிறங்கியுள்ள இடம் நிலவின் தென் துருவ பகுதி ஆகும். இது நிலவின் மேற்பரப்பில் இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத பகுதியாக உள்ளது. அமெரிக்கா உட்பட பல நாடுகள், நீண்ட கால விண்வெளி பயணங்கள் மூலம் நிலவின் இருந்து கனிமங்களை எடுத்துவர முயலும் நிலையில் சீனா அந்த முயற்சியில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

சீனாவின் தெற்கு தீவான ஹைனானில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து சீனாவின் லாங் மார்ச்-5 ராக்கெட் மூலம் சாங்-6 விண்கலம் ஒரு மாதத்திற்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டது.

"சாங்-6 திட்டத்தின் நோக்கம் நிலவின் தொலைதூரப் பகுதியிலிருந்து மாதிரிகளுடன் திரும்புவது ஆகும். இந்தத் திட்டம் பல பொறியியல் கண்டுபிடிப்புகள், அதிக ஆபத்துகள் மற்றும் பெரும் சிரமங்களை உள்ளடக்கியது" என்று சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"சாங்-6 லேண்டரால் சுமந்து செல்லப்படும் பேலோடுகள் திட்டமிட்டபடி செயல்பட்டு, அறிவியல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்" என்றும் CNSA நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது நிலவின் தென்துருவப் பகுதியில் சீனாவின் இரண்டாவது வெற்றிகரமான தரையிறக்கம் ஆகும். இரண்டாவது முறையாக நிலவில் மென்மையான தரையிறக்கம் செய்திருப்பது வேறு எந்த நாடும் செய்யாத சாதனையாகும். நிலவின் ஒரு பகுதி எப்போதும் பூமியிலிருந்து விலகியே உள்ளது. இது நிலவில் தகவல்தொடர்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக அமைகிறது.

Related News

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்