Apr 19, 2026
Thisaigal NewsYouTube
12ஆவது குழந்தைக்கு தந்தை என்று   உண்மையை போட்டுடைத்த எலான் மஸ்க்
உலகச் செய்திகள்

12ஆவது குழந்தைக்கு தந்தை என்று உண்மையை போட்டுடைத்த எலான் மஸ்க்

Share:

இந்தியா, ஜுன் 26-

டெஸ்லா ஓனர் எலான் மஸ்குக்கு ரகசிய குழந்தை பிறந்ததாக செய்தி வெளியான நிலையில், உங்களுக்குதான் அது ரகசியம், எனக்கில்லை என எலான் மஸ்க் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

டெஸ்லா, எக்ஸ் நிறுவனங்களின் ஓனரான எலான் மஸ்க் ஏ.ஐ. மனிதனின் மூளையை தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நரம்பு இணைப்பு போன்ற நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.செயற்கை நுண்ணறிவு துறையில் கலக்கி வரும் ChatGpt-யை உருவாக்கியவர்களில் ஒருவரான மஸ்க் பின்னர் அதிலிருந்து விலகிவிட்டார். நவீன தொழில்நுட்பத்தில் தீவிர கவனம் செலுத்தும் மஸ்க், உலகம் முழுவதும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து அவ்வப்போது கவலை தெரிவித்து வருகிறார்.

அதை தனது சொந்த வாழ்க்கையிலும் செயல்படுத்தி வருவதிலும் மஸ்க் தவறவில்லை. ஜஸ்டின் வில்சன் என்பவரை முதலில் மணந்த மஸ்க்கு 2002 ஆம் ஆண்டு பிறந்த குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து ஜஸ்டின் வில்சன் மூலம் மஸ்க்குக்கு 2004 ஆம் ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பின்னர் செயற்கை கருத்தரிப்பு முறையில் மஸ்க்கு காய், சாக்சன், டாமியன் என்ற 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தன.

2008 ஆம் ஆண்டு வில்சனை விவாகரத்து செய்த மஸ்க், ரிலே என்பவரை திருமணம் செய்து கொண்டார். எனினும் அவர் மூலம் மஸ்க் குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து கனடாவைச் சேர்ந்த கிரிம்ஸ் என்பவருடன் உறவுல் இருந்தார் மஸ்க். இவர் மூலம் 3 குழந்தைகளுக்கு தந்தையானார். இதுதவிர தனதுநியூராலிங்க் நிர்வாகி ஷிவோன் ஜிலிஸ் மூலம் இரட்டை குழந்தைக்கு தந்தையானார்.

ஷிவோன் ஜிலிஸ் தற்போது 3 வது குழந்தையை பெற்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மஸ்க் 12 ஆவது முறையாக தந்தையானதாக கூறப்பட்ட நிலையில், ரகசிய குழந்தையா என கேள்வி எழுப்பட்டது. வழக்கம்போல் தனது கிண்டலான முறையில் பதில் அளித்துள்ள மஸ்க். உங்களுக்குதான் அது ரகசியம், எனது குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் அது ஏற்கனவே தெரியும் என அதிர வைத்தார்.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு