Jun 13, 2026
Thisaigal NewsYouTube
கைதியின் இதயத்தில் ஓராண்டாக சிக்கியிருந்த ஊசிகள் அகற்றம்
உலகச் செய்திகள்

கைதியின் இதயத்தில் ஓராண்டாக சிக்கியிருந்த ஊசிகள் அகற்றம்

Share:

இந்தூர், செப்டம்பர்.27-

மத்திய பிரதேசத்தில் விசாரணை கைதி ஒருவரின் இதயத்தில் ஓராண்டாக சிக்கியிருந்த மூன்று ஊசிகளை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

மத்திய பிரதேசத்தின் இந்துாரில், குற்றவழக்கு ஒன்றில் விசாரணைக் கைதியாக 29 வயது நபர் உள்ளார். இவருக்கு இதயத்தில் கடும் வலி ஏற்பட்டதால், அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள், 'சி.டி.ஸ்கேன்' பரிசோதனை செய்து பார்த்தனர். அதில், அவரது இதயத்தில் 2.5 அங்குலம் நீளத்தில் மூன்று ஊசிகள் குத்தியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவற்றை எட்டு மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். தற்போது கைதி நலமுடன் உள்ளார்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கைதி, கடந்த ஆண்டு டில்லியில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு வேறு ஒரு நபருடன் பணம் தொடர்பாக சண்டை எழுந்தது. அதில், பிளாஸ்டிக் குண்டுகள், ஊசிகள் போன்றவற்றை செலுத்த பயன்படும், 'ஏர் கன்' வைத்து கைதியை மற்றொருவர் தாக்கியுள்ளார்.

இதில் கைதியின் மார்பு, கழுத்து, தலையில் பல ஊசிகள் பாய்ந்தன. உடனடியாக அவரது உடலில் இருந்த சில ஊசிகள் அகற்றப்பட்டன. ஆனால் இதயத்தில் சிக்கிய மூன்று ஊசிகள் அப்போது கவனிக்கப்படவில்லை.

Related News

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!