Oct 21, 2025
Thisaigal NewsYouTube
சென்னையில் பரபரப்பு; துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது
உலகச் செய்திகள்

சென்னையில் பரபரப்பு; துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது

Share:

சென்னை

புழலில் பதுங்கியிருந்த A+ பட்டியலில் உள்ள ரவுடியான சேது (30) துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். இவர் மீது, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

சேது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததும் மிகவும் இரசியமாக போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இந்த நிலையில் புழலில் பதுங்கியிருந்த சேது துப்பாக்கி முனையில் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், சேதுவுடன் A பட்டியலில் இருக்கும் ரவுடியான பிரபு என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கடந்தாண்டு சோழவரம் அருகே என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணனின் எதிர் தரப்பாக சேது செயல்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் ஒருவர் பின் ஒருவராக ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.

சென்னையில் ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.

இவரின் கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News