Oct 18, 2025
Thisaigal NewsYouTube
இதுதான் விண்வெளியா?.. 10000 வருட பயணம்.. போய் டச் பண்ணிட்டு பூமிக்கு மீண்டும் ரிட்டன் பூமராங் கல்
உலகச் செய்திகள்

இதுதான் விண்வெளியா?.. 10000 வருட பயணம்.. போய் டச் பண்ணிட்டு பூமிக்கு மீண்டும் ரிட்டன் பூமராங் கல்

Share:

வழக்கமாக விண்வெளியிலிருந்துதான் ஏதாவது கற்கள் பூமியில் விழும். ஆனால், பூமியிலிருந்து 10 ஆயிரம் வருஷத்திற்கு முன்னர் விண்வெளிக்கு சென்ற கல் ஒன்று தற்போது மீண்டும் பூமியை வந்து சேர்ந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்! ஆப்பிரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

விண்வெளிக்கு ஸ்பேஸ் என்று பெயர். ஸ்பேஸ் எனில் வெற்றிடம், காலியிடம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் விண்வௌி வெற்றிடம் கிடையாது. அங்கு ஏகப்பட்ட பொருட்கள் இருக்கிறது. கோள்கள், குறுங்கோள்கள், விண்கற்கள், விண்மீன்கள், வால் நட்சத்திரங்கள், நிலவுகள் என ஏராளமானவை இருக்கிறது. அதிலும் குறிப்பாக பூமியிலிருந்து அப்படியே ஒரு தாவு தாவி செவ்வாய் சென்றால் அதற்கு பக்கத்தில் ஒரு பெரிய விண்கற்கள் கூட்டமே இருக்கிறது.

ஏராளமான விண்கற்கள் இங்கு சும்மா சுற்றிக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து கிளம்பும் சிறிய சிறிய கற்கள் செவ்வாய், பூமியை நோக்கி அசுர வேகத்தில் வரும். ஆனால் நமக்குதான் வளிமண்டலம் எனும் ப்ளஸ் பாயிண்ட் இருக்கிறதே. எனவே இந்த கற்கள் வர வேகத்தில் அப்படியே எரிந்து சாம்பலாக மாறிவிடும். இல்லையெனில் மிகவும் சிறிய கற்களாக, மணல் துகளை போன்று பூமியில் விழும். சில நேரங்களில் கல் பெரியதாக இருந்தால் பாதி எரிந்தும், பாதி எரியாமலும் விழுந்துவிடும்.

அப்படி விழுந்த கல் ஒன்றைதான் விஞ்ஞானிகள் சில நாட்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் கண்டுபிடித்தனர். கருப்பு கலரில் இருந்த அந்த கல்லின் மேற்பகுதியில் டார்க் சாக்லேட் ஊற்றினால் எப்படி இருக்குமோ அப்படிதான் இருந்தது. முதலில் இது சாதாரண விண்கல் என்று நினைத்துதான் ஆய்வாளர்கள் சோதனை செய்து பார்த்தனர். அப்போதுதான் ஷாக்கான ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்ற விண்கற்களை விட இது வித்தியாசமாக இருப்பதை அவர்கள் கவனித்தனர்.

சுருக்கமாக சொல்லனும்னா.. இது பூமியில் இருக்கும் சாதாரண கல் போல இருக்கிறது. ஆனால் அதே சமயம் விண்வெளியிலிருந்தும் விழுந்திருக்கிறது. இப்போதான் டவுட்டு ஸ்டார்ட் ஆகுது. அதாவது யார் இந்த கல்லை விண்வெளியில் போட்டிருப்பார்கள் என்பதுதான் அந்த டவுட். விண்வெளியில்தான் காஸ்மிக் கதிர்களின் ரேடியேஷன் ஓவராக இருக்கும். அந்த ரேடியேஷன் தாக்கியதால் இந்த கல்லில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

Related News