இஸ்தான்புல், ஜனவரி.08-
துருக்கிக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது பயணத்தின் இறுதி நாளான இன்று இஸ்தான்புல் சென்றடைந்தார்.
தமது துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸாவுடன் சென்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார், அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பிரதமரின் இந்த அதிகாரத்துவப் பயணத்தில் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான், உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் கடீர் மற்றும் முதலீடு, வர்த்தகம் தொழில் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.








