ஜகார்த்தா, ஜூலை.30-
ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல நாடுகள் சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்த வேளையில், ஆகக் கடைசியாக இந்தோனேசியாவும் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆகப் பதிவாகி உள்ளது. இது சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும் என்று இந்தோனேசிய வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக இந்தோனேசியக் கடலோரப் பகுதியில் தீவிர சுனாமி அலைகள் 0.5 மீட்டர் வரை உயர்ந்ததாக அந்த மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இந்தோனேசியாவைப் போலவே ஜப்பான் மற்றும் அமெரிக்கா, சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளன.








