நோவாஷாட், ஆகஸ்ட்.30-
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மவுரிடானியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 49 பேர் பலியாகி உள்ள நிலையில், 100 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்டோர் படகு ஒன்றில் மவுரிடானியாவின் அட்லான்டிக் கடல் வழியாக ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு அகதிகளாக கடந்த 26ம் தேதி புறப்பட்டனர்.
அப்படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதில், 49 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.
கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது, ஒரு நகரத்தின் வெளிச்சம் தென்பட்டுள்ளது. அதை பார்த்து ஆர்வமடைந்த பயணிகள் அனைவரும் படகின் ஒரு பக்கத்திற்கு நகர்ந்து உள்ளனர். இதனால், பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.