Sep 13, 2026
Thisaigal NewsYouTube
வெனிசுலா அதிபர் மாளிகை அருகே டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு
உலகச் செய்திகள்

வெனிசுலா அதிபர் மாளிகை அருகே டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு

Share:

கரகாஸ், ஜனவரி.07-

வெனிசுலாவின் தலைநகர் கரகாஸ் நகரில் கடந்த 3-ந்தேதி அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இதனிடையே, வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்சை புதிய இடைக்கால அதிபராக வெனிசுலா உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

இந்த நிலையில், வெனிசுலாவின் தலைநகர் கரகாஸில் உள்ள அதிபர் மாளிகை அருகே அடையாளம் தெரியாத டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த டிரோன்களை வெனிசுலா பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்தச் சம்பவத்தால் வெனிசுலா தலைநகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து வெனிசுலா அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், தலைநகரில் நிலைமை சீராக இருப்பதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வெனிசுலா அதிபர் மாளிகை அருகே டிரோன்கள் பறந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை