Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு
உலகச் செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு

Share:

காசியாபாத், ஜூன்.15-

காசியாபாத், கோல்கட்டா ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான ஓடுபாதையிலேயே 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. கோல்கட்டா விமான நிலையத்தில் இருந்து காசியாபாத்திற்கு ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 1511 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக விமானம் புறப்படவில்லை.

அவ்விமானம் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக விமான ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மேலேழும்பாமல் இருந்துள்ளது. அது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் என்ன கோளாறு என்பதை கண்டறியும் பணியில் இறங்கினர்.

இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கோல்கட்டா, ஹிண்டன் விமானம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் புறப்படவில்லை. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் தாமதமாக இயக்கப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம் என அது குறிப்பிட்டது,

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நடந்த சில நாட்களில் மீண்டும் ஏர் இந்தியா விமானம் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News