ஹானோய், ஜூலை.20-
வியட்நாமில் இடி விழுந்து, படகு கவிழ்ந்ததில், 30 சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 13 பேரைக் காணவில்லை.
வியட்நாமின் ஹா லாங்க் பே பகுதியில் அச்சம்பவம் நிகழ்ந்தது. அங்கு உள்ள ஆற்றில், 48 பயணிகள் மற்றும் ஐந்து ஊழியர்களுடன், படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. சுற்றுலாவுக்குப் புகழ் பெற்ற அந்த ஆற்றின் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென இடி விழுந்தது, பலத்த காற்றும் வீசியது. இதில், அந்த படகு தலைகீழாகக் கவிழ்ந்தது. உடனடியாக அருகில் உள்ளவர்கள், ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதே நேரத்தில், 30 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர காணாமல் போன, 13 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.








