Oct 20, 2025
Thisaigal NewsYouTube
காசாவில் போர் நிறுத்தம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றம்.
உலகச் செய்திகள்

காசாவில் போர் நிறுத்தம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றம்.

Share:

காசா, மார்ச் 27-

காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக் குழுவினரிடையே ஐந்து மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில், ரமலான் பண்டிகையை கருதி காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பாதுகாப்பு கவுன்சிலின் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களால் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா பங்கேற்காத நிலையில், 15 நாடுகளை கொண்ட கவுன்சிலின் மற்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இதன்மூலம் காசாவில் போர் நிறுத்தத்தை தற்காலிகமாக அமல்படுத்துவதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

Related News