கோலாலம்பூர், நவம்பர்.26-
ஆசியான் தலைமைத்துவத்தில் ஆலோசகராக நியமிக்கப்படும் எவரும், அவர்களின் புவிசார் அரசியல், பிராந்திர விவகாரங்களில் உள்ள நிபுணத்துவம் மற்றும் விரிவான அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அப்பதவியில் நியமனம் செய்யப்படுவர்கள், ஏற்கனவே அந்தந்த நாடுகளில் உயர் பதவி வகிப்பவர்கள் என்பதால், அவர்களின் பின்புலத்தை ஆராயத் தேவையில்லை என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியான் தலைமைத்துவத்தில் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகர் பதவியில் ஒருவர் நியமனம் செய்யப்படுவதற்கு முன்னால் அவர்களின் பின்புலம் சரிபார்க்கப்படுமா? என்று நேற்று நாடாளுமன்றத்தில் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷாஹிடான் காசிம் எழுப்பிய கேள்விக்கு, அன்வார் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
2025-ஆம் ஆண்டு ஆசியானுக்கு மலேசியா தலைமை தாங்கியதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் முன்னாள் தாய்லாந்து பிரதமர் Thaksin Shinawatra-ஐ ஆசியான் ஆலோசகராக அன்வார் நியமனம் செய்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் தலைமைத்துவ ஆலோசகர் பதவியானது பிலிப்பைன்சிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








