Mar 2, 2026
Thisaigal NewsYouTube
Hatyai வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த 310 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்
உலகச் செய்திகள்

Hatyai வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த 310 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்

Share:

அலோர் ஸ்டார், நவம்பர்.25-

தென் தாய்லாந்து, Hatyai நகருக்கு வார விடுமுறையில் சுற்றுலாவிற்குச் சென்ற போது, கனத்த மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வந்த 310 மலேசியர்கள் இன்று பிற்பகலில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

Hatyai நகரை வெள்ளம் சூழ்ந்திருந்த நிலையில் சுங்கைப் பட்டாணியைச் சேர்ந்த தொண்டூழிய தீயணைப்புக் குழுவினர் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சுங்கை பட்டாணி தொண்டூழிய தீயணைப்புக் குழுவின் தலைவர் லியோங் பெங் தாட் கூறுகையில், 310 மலேசியர்களும் மூன்று டிரெய்லர் லோரிகளில் Hatyai நகரிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் Danok நகருக்குக் கொண்டு வரப்பட்டனர் என்றார்.

Danok- கில் வானிலை ஓரளவு நன்றாக இருந்ததால் பின்னர் அனைவரும் மலேசிய எல்லைப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். Hatyai நகரில் சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டோடியதால் லோரிகள் மெதுவாக நகர வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News