Oct 11, 2026
Thisaigal NewsYouTube

சீனாவில் நிலச்சரிவுகள்: இருவர் பலி, 19 பேரின் கதி என்ன?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சீனாவில் நிலச்சரிவுகள்: இருவர் பலி,  19 பேரின் கதி என்ன?

குயிசூ, மே.23

சீனாவின் குயிசூ மாகாணத்தின் இரு வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளில் இருவர் பலியாயினர். 19 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மண் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என ஐயுறப்படுகிறது. சாங்க்‌ஷி மற்றும் குவோவா ஆகிய பகுதிகளில் அதிகாலை 3 மணி மற்றும் 8 மணியளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் ராணுவம் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →