நியூயார்க், பிப்ரவரி 29 -
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நீக்கியுள்ளது.ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மருத்துவக் கல்லூரியில் (Albert Einstein College of Medicine) படிக்கும் மாணவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி.
ருத் கோட்ஸ்மன் எனும் செல்வந்தர் அந்தக் கல்லூரிக்கு ஒரு பில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார்.தற்போதும் வருங்காலத்திலும் கல்லூரியில் பயிலும் எந்த மாணவரும் இனி கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
4ஆவது ஆண்டு மாணவர்களின் இந்த ஆண்டுக் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும்.வரும் (2024) ஆகஸ்டிலிருந்து மாணவர்களுக்கு இலவசக் கல்வி.அந்தக் கல்லூரி நியூயார்க் நகரின் ஆக ஏழ்மையான பகுதியில் உள்ளது.
அமெரிக்காவில் இவ்வளவு பெருந்தொகையை ஒரு மருத்துவக் கல்லூரி நன்கொடையாகப் பெற்றிருப்பது இதுவே முதல்முறை.93 வயது கோட்ஸ்மன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்.அவரும் அவரது கணவரும் அவ்வப்போது கல்லூரிக்கு நன்கொடை வழங்கியிருக்கின்றனர்.