Oct 20, 2025
Thisaigal NewsYouTube
இறுதிக்கட்டத்தில் உலகம், ஐரோப்பாவில் பேரழிவுகள்" பேய்களுடன் பேசும் ரஷ்ய பெண் - வெளியிடும் பகீர் தகவல்கள்
உலகச் செய்திகள்

இறுதிக்கட்டத்தில் உலகம், ஐரோப்பாவில் பேரழிவுகள்" பேய்களுடன் பேசும் ரஷ்ய பெண் - வெளியிடும் பகீர் தகவல்கள்

Share:

ரஷ்யா, ஜூன் 19-

ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண்மணி, எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து கணித்து கூறிவருவதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.

Kazhetta Akhmetzhanova, இவர் ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி, பேய்களுடன் உரையாடி எதிர்காலத்தில் என்ன நடக்கவிருக்கிறது என்பதை துல்லியமாக கணித்துச் சொல்லும் வல்லமை இவரிடம் இருக்கின்றது என்று உள்ளூர் வாசிகள் பலரும் நம்புகின்றனர். பலமுறை சுனாமி போன்ற பேரழிவுகளை இவர் முன்கூட்டியே கணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் Kazhetta Akhmetzhanova என்ற அந்த பெண்மணி கணித்துள்ள விஷயங்கள், உண்மையாகவே நடக்குமா? ஏற்கனவே அப்படி நடந்துள்ளதா? என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தற்பொழுது அந்த ரஷ்ய பெண்மணி வெளியிட்டுள்ள சில தகவல்களை பின்வருமாறு காணலாம்.

உலகத்தை நோக்கி பேரழிவு ஒன்று நெருங்கி வருகிறது, ஆனால் அந்த பெரிய அழிவினால் கூட ரஷ்யாவை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார் அவர். உக்ரைன் நாட்டில் உள்ள ODESA என்ற இடத்திற்கு ஐரோப்பியர்கள் பலரும் குடிவேற்கிறார்கள், காரணம் விரைவில் ஐரோப்பாவில் நிகழவிருக்கும் ஒரு இயற்கை பேரழிவு தான் என்கிறார் அவர்.

ரஷ்யா மீது உள்ள உலகத்தின் மரியாதை அதிகரித்து வரும் நிலையில், தங்கள் நாட்டின் புகழ் மேலும் அதிகரிக்கும். அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் ஐரோப்பாவில் இயற்கை பேரழிவுகள் கொஞ்சம் கொஞ்சமான நிகழ துவங்கும். உலகையே உலுக்கும் அளவிற்கு பயங்கரமான வறட்சி ஒன்று விரைவில் நிகழப்போவதாகவும் அவர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

மக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ள புதிய வாழ்விடங்களை தேடும் நேரம் இது என்றும், உலகம் தன்னுடைய இறுதி கட்டத்தை நோக்கி தற்போது பயணிக்க தொடங்கியுள்ளதாகவும் பல பகீர் தகவல்களை அவர் கூறியிருக்கிறார்.

Related News