சுவிர்சலாந்து, ஜனவரி.10-
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) பகுதியில் உள்ள புகழ்பெற்ற 'லீ கான்ஸ்டலேஷன்' (Le Constellation) கேளிக்கை விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக, அதன் உரிமையாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புத்தாண்டு இரவு, இந்த விடுதியில் இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திரளாகக் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது, போத்தல்களில் இணைக்கப்பட்டிருந்த 'மினுமினுப்பு வானவேடிக்கை குச்சிகள்', விடுதியின் மேற்கூரையில் ஒட்டப்பட்டிருந்த சத்தம் ஊடுருவாத பஞ்சு போன்ற பகுதியில் பட்டதால் தீப்பரவல் ஏற்பட்டது. அச்சம்பவத்தில் 40 பேர் பலியானதுடன்116 பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் 20 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடுதியின் உரிமையாளர்களான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மீது கவனக்குறைவாக மரணத்தை விளைவித்தல், தீ வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.








