Jan 5, 2026
Thisaigal NewsYouTube
பிரேசிலை உலுக்கிய சாலை விபத்து: லாரி மீது பேருந்து மோதியதில் 11 பேர் பரிதாப பலி
உலகச் செய்திகள்

பிரேசிலை உலுக்கிய சாலை விபத்து: லாரி மீது பேருந்து மோதியதில் 11 பேர் பரிதாப பலி

Share:

பிரேசில், ஜனவரி.03-

பிரேசிலில் லாரி மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டதில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரேசிலின் தெற்குப் பகுதியில், ரியோ கிராண்டேவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பஸ் நிலை தடுமாறி, அந்த வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 17 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர். விபத்து குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

லாரியில் இருந்த மண் பஸ் மீது கொட்டியதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related News