Jun 12, 2026
Thisaigal NewsYouTube
தமிழர்களின் 150 ஆண்டுகள் பழமையான 'மாரி மாதா' கோவில் மர்ம நபர்களால் இடித்து ஆக்கிரமிப்பு!
உலகச் செய்திகள்

தமிழர்களின் 150 ஆண்டுகள் பழமையான 'மாரி மாதா' கோவில் மர்ம நபர்களால் இடித்து ஆக்கிரமிப்பு!

Share:

பாகிஸ்தானில் தமிழர்கள் நிர்வகித்து வந்த மட்ராசி ஹின்டு கொம்யூனிடி 150 ஆண்டுகள் பழமையான மாரி மாதா என்ற மாரியம்மன் ஆலயம் மர்ம நபர்களால் இடித்து ஆக்கிரமிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு விடுதலை மற்றும் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கராச்சியில் குடியேறினர். கராச்சியிலேயே தலைமுறைகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். இன்றளவும் தமிழ் மொழியை பேசுகின்றனர்; தமிழர் கலாசாரத்தை தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சி நகரில் சிறியதும் பெரியதுமான இந்து கோவில்கள் உள்ளன. இதில் மட்ராசி ஹின்டு கொம்யூனிடி என்கிற தமிழர்கள் கட்டுப்பாட்டின் கீழான மாரியம்மன் கோவில்களும் அடக்கம். இந்த கோவில்களில் தமிழ்நாட்டு வழிபாடுகள் இம்மியளவும் மாறாமல் இன்றும் பின்பற்றப்பட்டும் வருகின்றன.

இந்த மாரியம்மன் கோவில்களில் ஒன்று கராச்சியின் சோல்ஜர் பஜார் காவல்நிலையம் அருகே அமைந்திருந்தது. இந்தக் கோவிலுக்கு குறிவைத்த ஆக்கிரமிப்பு கும்பல் புல்டோசர் கொண்டு கோவிலை இடித்து தரைமட்டமாக்கி ஆக்கிரமித்துக் கொண்டது. இந்த கோவில் நிலத்தில் போலி ஆவணங்கள் மூலம் வணிக வளாகம் கட்டவும் இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு கும்பல், இந்து கோவிலை இடிக்கும் போது அப்பகுதியில் போலீசாரும் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Related News

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

போர்நிறுத்தம் முறிந்தது, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்

போர்நிறுத்தம் முறிந்தது, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்