காபூல், செப்டம்பர்.01-
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 2,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டை ஆட்சி செய்து வரும் தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை அதிகாலையில் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவானது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. காயமடைந்தோர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். ஒரே கிராமத்தில் ஏறத்தாழ 30 பேர் மாண்டு விட்டதாக ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைச்சு கூறியது. மாண்டவர்கள் தொடர்பான துல்லியமானத் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக அது தெரிவித்தது.