டென்பசார், செப்டம்பர்.26-
இந்தோனேசியாவின் பாலி தீவில் மரணமடைந்த 23 வயது ஆஸ்திரேலிய இளைஞர் Byron Haddow-வின் உடல், இதயம் இல்லாமல் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட விவகாரத்தில் பாலி காவல்துறை தற்போது மறுவிசாரணையைத் தொடங்கியுள்ளது.
Haddow-வின் உடல், இதயம் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கு தற்போது, உறுப்புகள் திருடப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
சம்பவம் நடந்த நேரத்தில் ஹாடோவுடன் வில்லாவில் தங்கியிருந்த மூன்று ஆஸ்திரேலியர்களை விசாரிக்க, பாலி காவல்துறை தற்போது ஆஸ்திரேலிய போலீசாரின் உதவியை நாடியுள்ளதாக பாலி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் அரியாசெண்டி தெரிவித்துள்ளார்.