இஸ்ரேல்: இஸ்ரேல்-காசா இடையே தற்காலிகமாக 4 நாட்கள் போர் நிறுத்தம் என்பது இன்று முதல் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு உள்ளது. கடந்த மாதம் 7 ம்தேதி இந்த மோதல் என்பது போராக மாறியது. அதாவது அன்றைய தினம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
இதில் இஸ்ரேலை சேர்ந்த 1000க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். அதோடு எல்லை தாண்டி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கிவிட்டதாக கூறி காசா மீது தாக்குதலை தொடங்கினார்.
இந்த தாக்குதல் 7 வது வாரமாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல், தரைவழி தாக்குதலால் காசா நகர் உருக்குலைந்துள்ளது. காசாவை சேர்ந்த 14 ஆயிரத்துக்கும் அதிகானவர்கள் பியான நிலையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தியா உள்பட பல உலக நாடுகள் போரை நிறுத்த கூறியும் இஸ்ரேல் கேட்காமல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.