ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் உலகின் பல்வேறு இடங்களில் பாலஸ்தீனர் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்தில் இதுதொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அப்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதை உள்துறை மந்திரியான சுயெல்லா பிரேவர்மேன் விமர்சித்திருந்தார். இவர் கருத்திற்கு கடும் விமர்சனம் எழுப்பப்பட்டது.