பாங்கோக், அக்டோபர்.06-
தாய்லாந்து காஞ்சனபுரியில், வளர்ப்புச் சிங்கம் ஒன்று தனது கூண்டிலிருந்து தப்பித்து, அருகிலுள்ள கிராமத்தில் புகுந்து, இருவரைத் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகப் பிரபலமான பரின்யா பார்க்பூம், தான் வளர்த்து வரும் சிங்கங்களை வைத்து தினமும் வீடியோ பதிவுகள் செய்து வந்தார்.
நேற்று அக்டோபர் 5-ஆம் தேதி, இரவு 9.40 மணியளவில், கூண்டிலிருந்து தப்பிய சிங்கம் ஒன்று, 11 வயது சிறுவனையும் 43 வயதான ஆடவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளது.
இந்நிலையில், இருவரும் தற்போது இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.