கோலாலம்பூர், அக்டோபர்.27-
தமது மலேசிய வருகையின் போது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளூர் இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடிய காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த காணொளி கிட்டத்தட்ட 38 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. டிரம்பின் ஆலோசகர் Alex Bruesewits இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் காணொளியின் பிரபலத் தன்மையையும் அவர் விவரித்துள்ளார்.








