Oct 20, 2025
Thisaigal NewsYouTube
71 C வரை செல்லும் வெப்பநிலை
உலகச் செய்திகள்

71 C வரை செல்லும் வெப்பநிலை

Share:

ரஷ்யா, ஏப்ரல் 09-

உலகின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம் என்பது நாம் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு குளிராக மாறும். உலகின் சில பகுதிகளில் இந்த குளிக்கலாம் மக்களின் வாழ்க்கையை கடினமாக்கி வருகின்றது.

ரஷ்யாவின் பல பகுதிகளில் பணிகள் ஆண்டு முழுவதும் சூழ்ந்திருக்கும், இப்பொது இந்தியாவில் சராசரியாக 40 டிகிரி செல்சியஸ் நிலவி வரும் இதே நேரத்தில், ரஷ்யா நாட்டில் உள்ள துறைமுக நகரமான யாகுட்ஸ்க் என்ற பகுதியில் -19 டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் தான் பதிவாகி வருகின்றது. அந்த நகரத்தில் இதுவரை மிக குறைவாக பதிவான வெப்பநிலை சுமார் -87 டிகிரி செல்சியஸ்.

இந்திய Youtuberகள் சிலர் கூட இந்த அதிசய நகருக்கு சென்று Vlog செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆரம்ப பள்ளிகள் முதல் சில பல பல்கலைக்கழகங்கள் கூட செயல்பட்டு வருகின்றது. அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் முதல் இப்போதெல்லாம் -41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருகின்றது. இங்குள்ள மக்களுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டது. காரணம் வெகு சில நொடிகளில் தண்ணீர் உறைந்து விடும்.

யாகுட்ஸ்க் நகர மக்கள் குளிப்பதற்கு முன்னாள், அவர்கள் சேமித்து வைத்திருக்கும் விறகுகளை கொண்டு தண்ணீரை சுட வைக்கின்றனர். அதற்கான தண்ணீரும், அவர்கள் வீடு வாசலில் மலையென குவிந்து கிடக்கும் பனியை கொண்டே உருவாக்கிக்கொள்கிறார்கள். இந்த பிரதேசங்களில் மீன்கள் தான் பிரதான உணவு, அது ஆண்டுக்கு ஒரு சில முறை பனி உருகும்போது மீன் வேட்டை ஆடுகின்றனர் இந்த நகர மக்கள்.

இந்த நகர மக்கள் வாரத்துக்கு ஒருமுறை, அதாவது ஞாயிற்று கிழமை மட்டுமே குளிக்க தங்களை பழக்கப்படுத்திக்கொள்கின்றனர். காரணம் தண்ணீர் நிறைய இருந்தாலும், அவர்கள் குளிக்கும் அளவுக்கு தண்ணீர் சூடாக சுமார் 5 மணிநேரம் பிடிக்கும், அதற்கு அதிக அளவில் மரங்களும் எரிபொருளாக தேவைப்படும், அதனால் தான் அவர்கள் வாரம் ஒருமுறை மட்டுமே குளிக்கின்றனர்.

உறைந்த உணவு, கடும் குளிரில் பயணம் செய்து படிப்பு, பெரிய அளவில் கிடைக்காத பொழுதுபோக்கு என்று இந்த யாகுட்ஸ்க் நகர மக்களின் வாழ்கை முறை முற்றிலும் மாறுபட்ட முறையில் உள்ளது. உலக அளவில் இவ்வளவு குளிரான பிரதேசத்தில் சுமார் 3.4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வது இந்த நகரில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News