Oct 30, 2025
Thisaigal NewsYouTube
டெக்சாஸ் கனமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 82 ஆக ஏற்றம்
உலகச் செய்திகள்

டெக்சாஸ் கனமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 82 ஆக ஏற்றம்

Share:

டெக்சாஸ், ஜூலை.07-

அமெரிக்கா, டெக்சாஸ் மாவட்டத்தில் கனமழையால் பலியானோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கனமழை அங்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடக்கத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கையானது ஒற்றை இலக்கத்தில் இருந்தது.

பின்னர் படிப்படியாக அதிகரித்து கிட்டத்தட்ட பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள கர்கவுண்டியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் பெரும் சேதம், உயிரிழப்பு காரணமாக இதைப் பேரிடராக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பெரும் பாதிப்பை சந்தித்துள்ள டெக்சாஸ் மாவட்டத்தை அவர் விரைவில் சென்று பார்வையிட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

Related News