Oct 17, 2025
Thisaigal NewsYouTube
வியட்னாமைச் சுழன்றடித்த கஜிகி: 7000 வீடுகள் சேதம், விமான நிலையங்கள் மூடல்
உலகச் செய்திகள்

வியட்னாமைச் சுழன்றடித்த கஜிகி: 7000 வீடுகள் சேதம், விமான நிலையங்கள் மூடல்

Share:

ஹனோய், ஆகஸ்ட்.26-

வியட்னாமைத் தாக்கிய கஜிகி சூறாவளிக்கு 3 பேர் பலியாகி இருக்கின்றனர். அங்குள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சீனாவின் தெற்கே வெப்ப மண்டல புயல் கஜிகி, வியட்னாமை நோக்கி நகர்ந்து தற்போது தாக்கி உள்ளது. சூறாவளியாக மாறி காற்றுடன் கடும் மழையும் பெய்ய, நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் 3 பேர் சிக்கி பலியாகினர். ஏராளமானோர் மாயமாகி இருக்கின்றனர்.

7000 வீடுகள், 28, 800 ஹெக்டேர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. 18,000 மரங்கள் சாய்ந்துள்ளன. தன்ஹோ பகுதியில் மட்டும் 331 மின்கம்பங்கள் சரிந்துள்ளன. தன்ஹோ, தாய் நுயுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் இல்லை.

மணிக்கு 130 கிமீ வேகத்தில் சுழன்றடித்த கஜிகி சூறாவளி ஹனோய் உள்ளிட்ட பல நகரங்களை கடுமையாக தாக்கியது. கிட்டத்தட்ட 44,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 16,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் இறங்கி இருக்கின்றனர்.

இரண்டு உள்நாட்டு விமான நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. 35 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. வியட்நாமில் இருந்து அனைத்துலக நாடுகளுக்குச் செல்லும் விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

Related News