மாஸ்கோ, மே.15-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், MGIMO எனப்படும் Moscow State Institute of International Relationsசிடம் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அரங்கில் அவரது தலைமைத்துவம் மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அப்பட்டம் வழங்கி சிறப்பிக்கப்படவிருக்கிறது.
ரஷ்யாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள அன்வார், MGIMOவில் பொது உரை நிகழ்த்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிகழ்வுகளை முடித்துக் கொண்டு அவர் தாதார்ஸ்டான் குடியரசுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு அன்வார், ஹலால் துறையில் பொருளாதார அரச தந்திரம் மற்றும் உயரிய நிலையிலான கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான், தோட்டத்தொழில், மூலப் பொருள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி உட்பட ஐந்து முக்கிய அமைச்சர் சென்றுள்ளனர்.








