ஜகார்த்தா, ஆகஸ்ட்.12-
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.3 ஆகப் பதிவானது.
இந்தோனேசியா அமைந்துள்ள நிலப்பரப்பு காரணமாக, அங்கு பல இடங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு பப்புவா பகுதியில், மதியம் 1.54 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆகப் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.