Oct 28, 2025
Thisaigal NewsYouTube
வரலாறு காணாத மழையில் 4 லட்சம் பேர் சிக்கித் தவிப்பு: வெள்ளக் காடானது அசாம்
உலகச் செய்திகள்

வரலாறு காணாத மழையில் 4 லட்சம் பேர் சிக்கித் தவிப்பு: வெள்ளக் காடானது அசாம்

Share:

குவஹாத்தி, ஜூன்.02-

அசாம் மாநிலத்தில் வரலாறு காணாத மழையால் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 29ம் தேதி முதல் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

கிட்டத்தட்ட 19 மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 4 லட்சம் பேரை கனமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சிரமப்பட்டு வருகின்றனர். கனமழையால் கச்சார் மாவட்டம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மழை, வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 10,000க்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் நிலச்சரிவு காணப்படுவதால் அரசின் உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சேர்வதில் சிக்கல் நிலவுகிறது.

அசாம் மாநிலத்திலேயே பெரிய நகரமான சில்ச்சார் நகரத்தில் 24 மணி நேரத்தில் 415.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 1893ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் அங்கு ஒரே நாளில் அதிக மழை பதிவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 132 ஆண்டுகள் கழித்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.

Related News